ரொறொன்ரோவை எதிர்நோக்கும் பனி, உறைபனி மழை.முன் எச்சரிக்கை!
ஒன்ராறியோவின் தென்பகுதியின் சில பகுதிகள் மற்றும் ரொறொன்ரோவிற்கு ஒரு விசேட வானிலை அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அடுத்த சில நாட்களில் இப்பகுதிகளில் பலத்த குளிர் காலநிலை விளாசப்போகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுகிழமை கனடா சுற்று சூழல் பிரிவினரால் விடுக்கபபட்ட இந்த அறிக்கையில் யு.எஸ்சில் இருந்து ஒரு குறைந்த அழுத்த அமைப்பு வடகிழக்காக ஒன்ராறியோவின் தென்பகுதியை இந்த வார ஆரம்பத்தில் நெருங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை அமைப்பு குறிப்பிடத்தக்க ஒரு வீழ்படிவை செவ்வாய்கிழமை கொண்டு வர உள்ளது.
பனிக்குவியல் மற்றும் உறைபனி மழை போன்றன மத்திய மற்றும் ஒன்ராறியோவின் கிழக்கு பகுதிகளை தாக்கலாம். பனிப்பொழிவு பின்னர் உறை பனி மழை மழை போன்றன லேக் எரி மற்றும் ஒன்ராறியோவில் ஏற்படும என அறிவிக்கப்பட்டுள்ளது.
உறை பனிமழை செவ்வாய்கிழமை பல மணித்தியாலங்கள் நீடிக்கும். அபாயகரமான வாகனமோட்டும் நிலைமைகளை ஏற்படுத்தும் என கனடா சுற்று சூழல் தெரிவித்துள்ளது.
ஞாயிற்று கிழமை 40சதவிகிதம் பனிப்பொழிவு ஏற்படலாம் எனவும் திங்கள்கிழமை நகரத்தில் பனிப்பொழிவு ஏற்படும் வானிலை முன்அறிவிப்பு கணிக்கின்றது.
dpuf