ரொறொன்ரோவில் வெப்ப எச்சரிக்கை? மருத்துவ அதிகாரி அறிவிப்பு.
கனடா- ரொறொன்ரோ பெரும்பாகத்தில் கொழுத்தும் வெயில் காரணமாக ஒரு வெப்ப எச்சரிக்கையை ரொறொன்ரோ சுகாதார மருத்துவ அதிகாரி ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ளார்.
இந்த எச்சரிக்கை மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா சுற்றுச்சூழல் இன்றய அதிஉயர் வெப்பநிலை 33 Cஎனவும் ஆனால் ஈரப்பதனுடன் கூடிய வெப்பநிலை 38ஐ அண்மித்து உணரப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
வெப்ப எச்சரிக்கை நேரத்தில் விசேடமாக வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்களினால் தனிமைப்படுத்தப்பட்ட பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் குளிர்மையாக அதிக அளவு நீர் பதார்த்தங்களை அருந்துமாறு நகரின் சுகாதார மருத்துவ அதிகாரி டேவிட் மக்கிவொன் தெரிவித்துள்ளார்.
தீவிர வியாதிகளினால் பாதிக்கப்பட்டவர்கள், வரையறுக்கப்பட்ட இயக்கமுடையவர்கள் அல்லது சிலவகை மன ஆரோக்கிய நோய்கள் கொண்டவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் பிள்ளைகள், குறிப்பிட்ட சில மருந்துகள் உபயோகிப்பவர்கள் மற்றும் வீடற்றவர்கள் போன்றவர்களிற்கு இவ்வெப்பநிலை ஆபத்தானதென எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை ரொறொன்ரோ ஹால்ரன் பீல் யோர்க் மற்றும் டர்ஹாம் பிரதேசங்களிற்கும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் அதிக அளவிலான தண்ணீர் குடிக்கும் படியும் குளிரூட்டப்பட்ட இடங்களில் தங்குமாறும் வெளியிடங்களில் தொய்வான மெல்லிய நிறுமுடைய சுவாசிக்க கூடிய ஆடைகளை அணியுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.