ரொறன்ரோ யோர்க் பிராந்தியத்தில் குப்பை சேகரிக்கும் வாகனத்தில் தீ
ரொறன்ரோ யோர்க் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீச் சம்பவத்தில் அப்பகுதியிலிருந்த 50 ற்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். எனினுமு பிற்பகல் அளவில் மீண்டும் அவர்களுடைய வீடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Natanya Boulevard பகுதியில் குப்பை சேகரிக்கும் வாகனத்தில் ஏற்பட்ட தீ காரணமாகவே இவ்வாறு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
குப்பை சேகரிக்கும் வாகனத்தில் தீ மூண்டமையால் அதிலிருந்து நச்சுத் தன்மையான புகை வெளியேறியதை அடுத்தே, குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அத்துடன் இந்த புகையால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.