இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான வனிந்து ஹசரங்க 10.75 கோடி இந்திய ரூபாவுக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நம்பிக்கைகுரிய வீரராக வலம் வரும் வனிந்து ஹசரங்க பந்துவீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு என சகல துறைகளிலும் ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகிறார்.
ஐ.சி.சி.யின் சர்வதேச இருபதுக்கு 20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 797 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கும் வனிந்து, ஐ.சி.சி.யின் இருபதுக்கு 20 சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான தரவரிசையில் 5 ஆவது இடத்திலும் உள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]