மீ டூ விவகாரம் வெடித்து கிளம்பிய பின் நடிகர் ராதாரவி பல மேடைகளில் வேடிக்கையாக சொல்லும் விஷயம் நடிகர்கள் இனி நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளில் நடிக்கும் முன்னதாக, அவர்களிடம் முன் கூட்டியே இப்படி இப்படி நடிக்கப்போகிறோம் என எழுதி வாங்கிக் கொள்ளுங்கள் என கூறி வருகிறார்.
பேசுவதற்கு நன்றாக இருக்கும்.. இது சாத்தியமா என தோன்றலாம். ஆனால் பாலிவுட்டில் தலிப் தாஹில் என்கிற சீனியர் நடிகர் இதை செயல்படுத்தியே விட்டார்.
தற்போது தான் நடித்துவரும் ஹோஸ்டேஜஸ் என்கிற வெப் சீரியஸில் கற்பழிப்பு காட்சி ஒன்றில் தன்னுடன் நடிக்கும் நடிகையிடம், நடிப்பதற்கு முன் அது குறித்து விளக்கி ஒப்புதல் கடிதம் எழுதி வாங்கியுள்ளார்.
அதுவும் போதாதென்று அந்த நடிகை தனது சம்மதத்தை தெரிவிப்பதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.