ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனின் காதலுக்கு வில்லனாக வந்தாலும், வெறுப்பிற்கு பதிலாக “பாவம்ப்பா” என பரிதாபத்தை அள்ளிக்கொண்டவர் தான் மலையாள நடிகர் அன்சன் பால்.. சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பிரபல பாலிவுட் நடிகரும் நாடக ஆசிரியருமான அனுபம் கெர் நடத்தி வரும் நடிப்பு பயிற்சி பள்ளியில் நடிப்பு கற்றுக்கொண்டவர் தான் இந்த அன்சன் பால்..
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான ‘ஊழம்’ படத்தில் பிருத்விராஜூக்கு வில்லனாகவும் சமீபத்தில் வெளியான ‘ஆடு-2’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது மம்முட்டி நடிக்க உள்ள போலீஸ் ஸ்டோரியான ‘ஆப்ரஹாமிண்டே சந்ததிகள்’ படத்தில் மம்முட்டியின் தம்பியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அன்சன் பால். நேற்று நடைபெற்ற இந்தப்படத்தின் துவக்க விழாவில், இவரை தானே வலிய அழைத்து மேடையேற்றி கௌரவித்தார் மம்முட்டி.