ரெமோ ட்ரைலரில் சொன்னதை முன்பே செய்துக்காட்டிய சிவகார்த்திகேயன்- எத்தனை பேருக்கு தெரியும்?
அந்த அளவிற்கு பி.சி.ஸ்ரீராமின் கேமரா கலர்புல்லாக இருக்க, ட்ரைலரிலேயே பாதி கதை தெரிந்து விட்டது.
கீர்த்தி சுரேஷை காதலிக்க தான் லேடி வேடம் போடுவார் என்று எதிர்ப்பார்த்தால், சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க தான் பெண் வேடம் போடுவது போல் வருகிறது.
அதில் அப்படியே கீர்த்தி சுரேஷுடன் காதல், மோதல் என செம்ம ஜாலியாக படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அதிலும் ட்ரைலரில் இறுதியில் கவுண்டர் ஸ்டைலில் ‘பார்த்துட்டான் பார்த்துட்டான்’ என்று கத்துவது சிவகார்த்திகேயனுக்கே உரிய ட்ரேட் மார்க்.
பிறகு சிவா கபாலி போஸ்டரை பார்த்து சூப்பர் ஸ்டார் மாதிரி வரவேண்டும் என்று கூறுகிறார், அதேபோல் ரெமோவிற்கு சத்யம் தியேட்டரில் பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு முன்பு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கே சத்யம் தியேட்டரில் பேனர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் உண்மையாகவே வேற லெவல் தான்.