ரூ.8000 கடன் வாங்கிய இளைஞருக்கு நேர்ந்த கொடுமை!
பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட நபரை Oldham பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தந்திரமாக வரவழைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலில் ஒருவரிடம் இருந்து ரூ.8000 கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பணத்தை திருப்பித் தர காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து குறிப்பிட்ட நபரை Oldham பகுதியில் உள்ள குடியிருப்புக்கு அழைத்துள்ளனர்.
குடியிருப்பில் வந்த இளைஞரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி நிர்வாணப்படுத்தியுள்ளனர். பின்னர் புறமுதுகு, வயிற்றுப்பகுதி உள்ளிட்ட பகுதியில் சூடு வைத்துள்ளனர். இதனால் உடல் வெந்து அந்த நபர் உயிருக்கு போராடியுள்ளார்.
பின்னர் அந்த காயத்தில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றினை தேய்த்து அந்த கும்பல் சித்திரவதை செய்துள்ளது.
கை கால்களை கட்டி வைத்து தொடர்ந்து தாக்கப்பட்டதாக அங்கிருந்து வந்த பின்னர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
பல மணி நேர தாக்குதலுக்கு பின்னர் வீட்டுக்கு திருப்பிச் செல்ல அனுமதித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த இந்த சம்பவத்தில் குற்றவாளிகளான சோயிப் கான்(17), ஆதம் உசேன்(16), சூபியன் யாகூப்(16) ஆகியோரில் சோயிப் கானுக்கு 6.5 ஆண்டுகள் சிறையும் எஞ்சிய இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறையும் விதித்துள்ளது மான்செஸ்டர் நகர நீதிமன்றம்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 வயது நபர் ஒருவருக்கு ஓராண்டு இரவு நேர ரோந்து பணியை தண்டனையாக வழங்கியுள்ளனர். அசன் கான் என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கியுள்ளனர்.
குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை கிடைக்கப்பெற்றாலும் பாதிக்கப்பட்ட நபரின் மனதளவில் உருவாகியிருக்கும் காயம் வாழ்நாள் முழுக்க ஆறாது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.