புழக்கத்தில் உள்ள, 5,000 ரூபாய் பெறுமதியான நாணயத்தாள், புழக்கத்திலிருந்து நீக்கப்படவுள்ளதென வெளியாகியுள்ள செய்தி, தவறானது என்று சுட்டிக்காட்டியுள்ள, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, அத்தாள்கள் நீக்கப்படாது என்றும் குறிப்பிட்டார்.
அந்தத் தாளை, புழகத்திலிருந்து நீக்கிவிடுவதற்கு, எவ்வாறான தீர்மானமும் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
5,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவது தொடர்பில், பொலிஸாருக்கு, கூடுதலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்நிலையிலேயே, அந்தத் தாளை, புழகத்திலிருந்து அகற்றிவிடுவதற்கு, மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக, செய்தி வெளியாகியிருந்தது.
இந்நிலையில், நாணயத்தாள்களை அச்சிடும் போது, புதிய பாதுகாப்பு முறைமையை கடைப்பிடிக்க உள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நாணயத்தாள்கள் மூலமாகவே, போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவதை முற்றிலும் தடைச்செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.