கடந்த ஒரு வாரகாலப் பகுதியில் ஏற்பட்ட பணவீக்கம் காரணமாக இலங்கை செலுத்தவிருந்த வெளிநாட்டுக் கடன்களுக்கான பெறுமதி 47 பில்லியன் ரூபாவினால் (4700 கோடி ரூபா) அதிகரித்துள்ளதாக முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியால் வௌியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 1.58 சதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155.26 ரூபாவாகவும் அதன் விற்பனைப் பெறுமதி 159.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்பணவீக்கத்தின் காரணமாக 30 பில்லியன் அமெரிக்க டொலராகவுள்ள இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 47 பில்லியன் ரூபாவினால் அதிகரிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.