கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 368. 51ஆக இருந்த டொலரின் விற்பனை விலை இன்று ரூ. 368. 46 ஆகக் குறைந்துள்ளது.
இதேவேளை, டொலரின் இன்றைய கொள்வனவு பெறுமதியானது 357.14 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும், இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபா ஏற்ற இறக்கமாக உள்ளது.
ரூபாவின் பெறுமதியில் இன்று அதிகரிப்பு | A Slight Appreciation Of The Rupee
யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட்
இதன்படி யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி, 376.76 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 361.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி, 446.58 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 429.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.