அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவரை பதவி விலக்க வேண்டும் என பொதுபல சேனா கோரியுள்ளது. இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த சீனி கண்டய்னரில் இருந்து கொகேய்ன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இந்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ள நபர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்காக அமைச்சர் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் பொலிஸாருக்கு விசாரணைகளை முன்னெடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மீட்கப்பட்டுள்ள கொகேய்ன் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது சந்தேகம் உள்ளதாக பலரும் கூறும் நிலையில் ஏற்கனவே நாம் மன்னார் ஊடாக போதை பொருள் கடத்தல் நடப்பதாக சுட்டிக்கட்டினோம் எனவே அமைச்சர் உடனடியாக பதவி விலகி விசாராணைகளுக்கு இடமளிக்க வேண்டும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அளவு பாரிய போதை பொருட்கள் அரசியல் அதிகாரம் இல்லாமல் இடம்பெற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.