முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.
இதன்போது ரிசாட் பதியுதீனின் மனைவி மற்றும் மேலும் 3 பேரின் தொலைபேசி உரையாடல் தொடர்பான தகவல்கள் மற்றும் குறித்த சிறுமியை ரிஷாட் பதியுதீன் இல்லத்தில் பணிக்கு அமர்த்திய முகவரின் வங்கி பணப்பரிமாற்ற விபரங்களையும் பொரளை காவல்துறைக்கு வழங்குமாறு தொலைபேசி சேவை வழங்குநர், வங்கிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.