ரியோ ஒலிம்பிக்கில் திருநங்கைகள்!
ரியோ ஒலிம்பிக் மகளிருக்கான போட்டியில் இரு திருநங்கைகள், மகளிருடன் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.
இந்த வருடத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் திருநங்கைகளை தேர்ந்தெடுப்பது இதுவே முதல் முறையாகும்.
இவர்கள் இருவரும் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் என்றும், மகளிருக்கான குழுவில் கடும் எச்சரிக்கையுடன் இவர்களுக்கு இடமளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியா பிரதிநிதிகளான இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக திருநங்கைகளாகவே இருந்துள்ளார்கள் என திருநங்கை டேல்யா ஜான்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.
திருநங்கைகளின் இனம் பற்றி தனக்கு நன்றாகவே தெரியும், இருப்பினும் ஏளனம் நிறைந்த உலகில் இவர்களின் திறமையை நிரூபிக்க வேண்டும் என டேல்யா ஜான்ஸ்டன் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, விளையாட்டு வீரர்களின் testostreone Hormone அளவுகளை நிரூபித்து காட்ட வேண்டும், முன்னதாக திருநங்கை ஒன்று விளையாட்டில் ஈடுப்பட வேண்டுமாயின் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் ஆனால் தற்போது புதிய சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு இந்த சிகிச்சை அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளது.
800 மீற்றர் உலக சாம்பியன் ஓட்டப் போட்டியில்,தென் ஆபிரிக்கா வீராங்கனையான செமன்யா வெற்றி பெற்றதனைத் தொடர்ந்து பால் நிலை தொடர்பான சர்ச்சை ஏற்பட்டது, இந்த நிலையில் சோதனை மேற்கொண்ட போது இவர் ஒரு பெண் என நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.