ரிம் ஹோட்டனின் மூல நிறுவனம் Popeyes ஐ 1.8பில்லியன் டொலர்களிற்கு வாங்குகின்றது.
ஒன்ராறியோ-தாய் நிறுவனமான ரிம் ஹொட்டன் மற்றும் பேர்கர் கிங் Popeyes சங்கிலி தொடர் கோழி உணவகத்தை 1.8யு.எஸ். டொலர்களிற்கு வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
Popeyes அதன் லூசியானா-பாணி வறுத்த கோழிக்கு பிரபல்யம் வாய்ந்தது.சர்வதேச பிராண்ட் உணவகம் (TSX:QSR) Popeyes பங்கு ஒன்றிற்கு 79யு.எஸ். டொலர்களை அளிக்க முன்வந்துள்ளது.
லூசியானா பாரம்பரியம் கொண்ட Popeyes உலகம் பூராகவும் விருந்தினர்களிடையே அலையடிக்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை நாஸ்டாக்கில் Popeyes பங்கு ஒன்று66.12யு.எஸ். டொலர்களிற்கு மூடப்பட்டது.
1972ல் நியு ஓலியன்சில் கண்டு பிடிக்கப்பட்ட Popeyes துரித-உணவு சந்தையில் முக்கிய போட்டியாளராக வளர்ந்துள்ளது.
யு.எஸ். கனடா மற்றும் இரண்டு டசின் நாடுகளில் 2600உணவகங்களை கொண்டுள்ளது.