இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அங்குரார்பண ரிட்ஸ்பறி தொடர் ஓட்ட சம்பியன்ஷிப்பில் (Ritzbury Relay Championship) ஆண்கள் பிரிவில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும் பெண்கள் பிரிவில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியும் ஒட்டுமொத்த சம்பியனாகின.
ரிட்ஸ்பறி தொடர் ஓட்ட த சம்பியன்ஷிப் 12, 14, 16, 18, 20 ஆகிய ஐந்து வயது பிரிவுகளில் இரு பாலாருக்கும் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஜூன் 24, 25, 26ஆம் திகதிகளில் நடத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களை ஊக்குவித்து, உற்சாகப்படுத்துவதில் பெற்றோர் மிகுந்த ஆர்வம் காட்டினர். சுகததாச அரங்கில் தொடர் ஓட்ட சம்பியன்ஷிப் நடைபெற்ற மூன்று தினங்களிலும் பெருமளவிலான பெற்றோர்கள் நிறைந்து வழிந்ததை அவதானிக்க முடிந்தது.
கிழக்கு மாகாணத்தில் தெய்யத்தகண்டி என்ற பின்தங்கிய பிரதேசத்திலிருந்து பங்குபற்றிய மாணவர்களை பெற்றோர்கள் உற்சாகப்படுத்திய விதம் அனைவரையும் பிரமிக்கவைத்தது.
தொடர் ஓட்ட சம்பியன்ஷிப்பில் ஆண்கள் பிரிவில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 95 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியனானது.
இப் பிரிவில் கண்டி திரித்துவ கல்லூரி 60 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தையும் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி 56 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன.
பெண்கள் பிரிவில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி 113 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியனானது.
வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 90 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தையும் அம்பகமுவ மத்திய மகா வித்தியாலயம் 62 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன.
இந்த இரண்டு சம்பியன்களுக்கும் ரிட்ஸ்பறி தொடர் ஓட்ட வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
சிபிஎல் புட்ஸ் இன்டர்நெஷனல் பிறைவேட் லிமிட்டெட் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுபுல் டி சில்வா பிரதம அதிதியாக கலந்துகொண்டு பிரதான பரிசில்களை வழங்கினார்.
வயதுநிலை சம்பியன்கள்
இந்த இரண்டு பிரதான சம்பியன் பட்டங்களை விட ஒவ்வொரு வயது பிரிவிலும் இருபாலரிலும் சம்பியனான பாடசாலைகளுக்கு ரிட்ஸ்பறி தொடர் ஓட்ட கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
ஆண்கள் பிரிவு
12 வயதின் கீழ் சம்பியன்: புனித பேதுருவானவர் கல்லூரி (17 புள்ளிகள்)
2ஆம் இடம்: றோயல் கல்லூரி (11 புள்ளிகள்)
14 வயதின் கீழ் சம்பியன்: நீர்கொழும்பு லோயலா கல்லூரி (27 புள்ளிகள்)
2ஆம் இடம்: கண்டி திரித்துவ கல்லூரி (17 புள்ளிகள்)
16 வயதின் கீழ் சம்பியன்: நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா (45 புள்ளிகள்)
2ஆம் இடம்: குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல ம.வி. (21 புள்ளிகள்)
18 வயதின் கீழ் சம்பியன்: நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா (35 புள்ளிகள்)
2ஆம் இடம்: கண்டி திரித்துவ கல்லூரி (27 புள்ளிகள்)
20 வயதின் கீழ் சம்பியன்: கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி (30 புள்ளிகள்)
2ஆம் இடம்: வலல்ல, ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி (30 புள்ளிகள்)
பெண்கள் பிரிவு
12 வயதின் கீழ் சம்பியன்: மியூசியஸ் கல்லூரி (14 புள்ளிகள்)
இணை 2ஆம் இடம்: ஜா எல அமல உற்பவ கன்னியாஸ்திரிகள் மடம் மற்றும் காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரி (10 புள்ளிகள்)
14 வயதின் கீழ் சம்பியன்: பன்னிப்பிட்டி தர்மபால வித்தியாலயம் (25 புள்ளிகள்)
2ஆம் இடம்: ஆவே மரியா கன்னியாஸ்திரிகள் மடம் (17 புள்ளிகள்)
16 வயதின் கீழ் சம்பியன்: வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை (34 புள்ளிகள்)
2ஆம் இடம்: அம்பகமுவ ம.ம.வி. 32 புள்ளிகள்
18 வயதின் கீழ் சம்பியன்: வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை (46 புள்ளிகள்)
2ஆம் இடம்: மாத்தறை ம.ம.வி. (36 புள்ளிகள்)
20 வயதின் கீழ் சம்பியன்: வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி (60 புள்ளிகள்)
2ஆம் இடம்: கம்பஹா திருச்சிலுவை கல்லூரி (33 புள்ளிகள்)