கொழும்பு – காலிமுகத்திடலில் இன்று ஏழாவது நாளாக அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் போராட்டக்காரர்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலே போராட்டக்காரர்கள் இதனை முன்வைத்துள்ளனர்.
இதன்போது தமது ஐந்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தாம் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்களது கோரிக்கைகளாவன,
1. உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும்.
2. பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்.
3. அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதுடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகள், ஏனைய துறைகளை மீட்டெடுத்தல் வேண்டும்.
4. இடைக்கால அரசை ஸ்தாபித்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள், ஏனைய அரசியல்வாதிகள் கொள்ளையடித்த நிதி மற்றும் சொத்துக்களைப் மீளப்பெறுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
5. ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்.
என்பன போராட்டகாரர்களது கோரிக்கைகளாக அமைந்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]