ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவிக்காக காலி முகத்திடல் இளைஞர்களையும், முழு நாட்டு மக்களையும் காட்டிக் கொடுத்துள்ளார்.
ஜனாதிபதியினதும், பொதுஜன பெரமுன பெரமுனவினதும் சிறைக்கைதியாகவுள்ளார்.
ராஜபக்ஷர்களை பாதுகாக்க நாட்டு மக்களை தொடர்ந்து காட்டிக் கொடுக்காமல் பிரதமர் கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் (20) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த 9ஆம் திகதி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம் பெற்ற வன்முறை சம்வங்கள் மற்றும் அதனால் பதிவான மரணங்கள் மற்றும் சொத்து சேதம் குறித்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன்,காலி முகத்திடல் கோட்டா கோ கம மற்றும் மை னா கோ கம போராட்டக்களத்தில் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஏனெனில் அமைதி வழி போராட்டத்தின் மீது அரசாங்கம் தான் வன்முறை தாக்குதலை மேற்கொண்டது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்,நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் பாராளுமன்றில் விவாதத்தை முன்னெடுத்து அடுத்தக்கட்ட நகர்வு குறித்து அவதானம் செலுத்த கடந்த வாரம் பாராளுமன்றில் கொண்டு வந்த யோசனையை ஆளும் தரப்பினர் தோற்கடித்தனர்.
நாட்டில் இடம்பெற்ற வன்முறை மற்றும் போராட்டங்களுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உட்பட அரசாங்கமும்,ராஜபக்ஷ குடும்பமும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை சகலரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் அவதானம் செலுத்தாமல் ராஜபக்ஷர்களை பிரதிநிதித்துவப்படுத்தியதால் தான் மக்கள் அரசியல்வாதிகள் மீதும்,அவர்களின் வீடுகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் விடுகளுக்கு சென்றதால சபை முதல்வர் குறிப்பிட்டார்.
சபை முதல்வர் குறிப்பிட்ட விடயம் தவறானது. அச்சந்தர்ப்பத்தின் போது கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டதும் பொது மக்கள் அவர்களுக்கு இடையூறு விளைவிக்கவில்லை. செல்வதற்கு இடமளித்தார்கள்.
தமது மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறோம் என்பதை மக்கள் அறிந்துக் கொண்டுள்ளார்கள்.
இதன்போது குறிக்கிட்ட சபை முதல்வர் தினேஷ் குணவர்தன ‘மொழிப்பெயர்ப்பில் பிழை ஏற்பட்டுள்ளது.
தங்களுக்கு சிங்கள மொழி நன்கு தெரியும் என்பதை அறிவேன்.அந்த இரு உறுப்பினர்களும் பாராளுமன்றில் உள்ளார்கள்.உயிரச்சுறுத்தல் காரணமாக இந்தியா சென்றார்கள்.
நீங்கள் அக்காலப்பகுதியில் பிறக்கவில்லை.தெரியாத விடயத்தை பற்றி கதைக்க வேண்டாம்.கட்சி அடிப்படையில் நாங்கள் செயற்படவில்லை ‘என்றார்.
மக்களுக்காக செயற்படுவதால் கூட்டமைப்பினர் மீது எவரும் தாக்குதலை ஏற்படுத்தவில்லை.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் அன்று பெருமையுடன் கருத்துரைத்த முன்னாள் நிதியமைச்சர் தற்போது எவ்வாறு கருத்துரைக்கிறார்.
20ஆம் திருத்தத்தை போன்று,நாட்டுக்கு எதிராக தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கி ய காரணத்தினால் மக்கள் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளார்கள்.
மக்களாணையை காட்டிக் கொடுத்ததன் பிரதிபலனை தற்போது ஆளும் தரப்பினர் எதிர்க்கொள்கிறார்கள்.
காலி முகத்திடல் இளைஞர் போராட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காட்டிக்கொடுத்துள்ளார்.
பிரதமராக வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த மக்களையும் அவர் காட்டிக்கொடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகும் அளவிற்கு பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகினால் அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என மக்கள் விடுதலை முன்னணியும்,ஐக்கிய மக்கள் சக்தியும் குறிப்பிட்டமை மதிப்பளிக்க கூடியதொரு கொள்கையாகும்.
இவ்வாறான பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எவ்வித நிபந்தனைகளுமில்லாமல் பிரதமர் பதவியை பொறுப்பேற்றார்.
பொருளாதார மீட்சி தொடர்பில் பிரதமர் எவ்வித புதிய திட்டங்களையும் முன்வைக்கவில்லை மாறாக பொருளாதார நெருக்கடி தொடர்பில் மக்களுக்கு உரையாற்றுகிறார்.
நெருக்கடியை முழு நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.இவர் புதிதாக கூற வேண்டிய தேவை கிடையாது.
ராஜபக்ஷர்களை பாதுகாக்கும் நோக்கில் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ராஜபக்ஷர்களுடன் செய்துக் கொண்ட டீல் என்ன என்பதை பிரதமர் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
பதுங்கு குழியில் மறைந்திருந்த ராஜபக்ஷர்களும்,கடற்படையில் மறைந்திருந்த நாமல் ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றிற்கு வருகை தருவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.
தனது கையில் தான் பொதுஜன பெரமுன உள்ளது என்பதை பஷில் ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.
கோட்டா கோ கம போராட்டக்களத்தை பிளவுப்படுத்தும் டீல் செய்துள்ளார். போராட்டகாரர்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்தி போராட்டத்தை இல்லாதொழிக்க முயற்சிக்கிறார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் எவ்வித தனிப்பட்ட பகைமையும் கிடையாது.காலி முகத்திடல் போராட்டத்தை காட்டிக் கொடுத்த ஆத்திரம் மற்றுமே உள்ளது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் சிறைக்கைதியாக உள்ளார்.கடந்த காலத்தில் இருந்த ரணில் விக்கிரமசிங்க தற்போது இல்லை.
பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திற்கு எதிராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு பிரேரணையை கொண்டு வந்தால் அதற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் எவரும் ஆதரவு வழங்கமாட்டார்கள்
தமிழ் சிறைக்கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து போராடுகிறோம்.
எதிர்வரும் பௌர்ணமியின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்ற கைதிக்கு ஜனாதிபதி விடுதலையளிக்க வேண்டும்.
நாட்டுக்காக இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம்.திருடர்களை இவரால் ஒருபோதும் பகிரங்கப்படுத்த முடியாது.
எந்த குற்றச்சாட்டுக்கள் குறித்தும் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க பிரதமரால் முன்னெடுத்தால்.
விசாரணைகளை முன்னெடுத்தால் 113 பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் போகும் அத்துடன் பிரதமர் பதவியும் இல்லாமல் போகும்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தின் ஊடாக இரட்டை குடியுரிமையாளருக்கு பாராளுமன்ற பிரவேசத்திற்கு தடை விதிக்க முடியுமா.
நாடு பொருளாதரார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள போது எதற்கு மாவட்ட அபிவிருத்தி தலைவர்கள். வீண் செலவுகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளார்கள்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். புதிய அமைச்சரவையை ஸ்தாபித்தால் மாத்திரம் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.
நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் காணப்பட வேண்டும். அரசாங்கததின் சிறந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் பிரதமர் பதவி காலம் முடிவடையும் போது சிறந்த முறையில் வீடு செல்லவில்லை.
ஜனாதிபதி கோட்டபயராஜபக்ஷவுடன் இவரும் வெகுவிரைவில் பதவி விலகுவார். இதனால் நாட்டுக்கு என்னவாகும் என்பது குறித்து ஆராய வேண்டும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து நாட்டு மக்களை காட்டிக் கொடுக்காமல் பதவி விலக வேண்டும் என்றார்.