இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை ஏப்ரல் 13 ஆம் திகதிவரை குஜராத் நீதிமன்றம் இன்று நீடித்துள்ளது.
குற்றவாளியாக காணப்பட்டமைக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீதான அடுத்த விசாரணையை எதிர்வரும் மே 3 ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குற்றவியல் அவதூறு வழக்கு ஒன்றில் ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து குஜராத் மாநிலத்தின் சூரத் நகரிலு;ளள நீதிமன்றம் கடந்த 23 ஆம் திகதி தீர்ப்பளித்தது.
எனினும், சிறைத் தண்டனை 30 நாட்களுக்கு நீதிமன்றம் இடைநிறுத்தியதுடன் மேன் முறையீடு செய்வதற்கும் ராகுல் காந்திக்கு அவகாசம் வழங்கப்பட்டது.
கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், ராகுல் காந்தி சூரத் நகரிலுள்ள நீதிமன்றம் ஒன்றில் இன்று மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் ராகுல் காந்தியின் பிணை மனு மீதான அடுத்த விசாரணையை ஏப்ரல் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடுன், அதுவரை ராகுல் காந்திக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.
ஆத்துடன், மேற்படி வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டமைக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 3 ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் இந்தியப் பிரதமர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி தொடந்த வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 வருட சிரைறத்தண்டனை விதித்திருந்தது.