ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடப்படும் வரையில் தான், அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ராகமவில் அமைந்துள்ள களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட வளாக மாணவர்கள் மீது நேற்று காலை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அவரது 23 வயது மகன் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய 07 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை இன்று வெலிசறை நீதிவான் நீதிமன்றில் அஜர்படுத்தியபோது, நீதிவான் பெப்ரவரி 07 ஆம் திகதி வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் நான்கு மாணவர்கள் உட்பட 05 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அருந்திக பெர்னாண்டோ தென்னை, கித்துல் மற்றும் பனை செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]