உக்ரைனில் ரஸ்யாவின் பாரியமனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களை ஹேக்கின் சர்வதேச நீதிமன்றத்துடன் அமெரிக்கா பகிர்வதை பென்டகன் தடுத்துவருவதாக முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச குற்றவியல் நீதி;மன்றம் ரஸ்யாவிற்கு எதிரான விசாரணைகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்கா உதவினால் அது ஒரு முன்னுதாரணமாக அமைந்து எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு எதிராக திரும்பலாம் என அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அஞ்சுகின்றனர் என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புலனாய்வு அமைப்புகள் நீதித்துறை உட்பட ஏனைய தரப்பினர் ரஸ்யாவின் யுத்த குற்ற ஆதாரங்களை ஹேக் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் என கருதுவதாக நியுயோக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி இன்னமும் இந்த முட்டுக்கட்டைக்கு தீர்வை காணவில்லை.
ரஸ்யா உக்ரைன் மீதான தாக்குதலை ஆரம்பித்த பின்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கு தொடுநர் ஆரம்பித்த விசாரைணகளிற்கு அவசியமான ஆதாரங்களை அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதை பென்டகன் தடுக்கின்றது.
உக்ரைனில் உள்ள பொதுமக்கள்கட்டிடங்களை வேண்டுமென்றே இலக்குவைப்பதற்கு ரஸ்யா திட்டமிட்டதற்கான ஆதாரங்களையும் அமெரிக்கா சர்வதேச நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதை பென்டகன் விரும்பவில்லை.