அமெரிக்காவின் சான் ப்ரான்சிஸ்கோ நகரில் உள்ள ரஷ்யத் துணைத் தூதரகத்தையும், இரண்டு தூதரக கூடுதல் மையங்களையும் மூடும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்கும்படி அந்நாடு வலியுறுத்தியதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கையை அமெரிக்க இராஜாங்க துறை எடுத்துள்ளது.
ரஷ்ய நடவடிக்கையை சமன் செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. துணைத் தூதரகத்தையும், வொஷிங்டனிலும் நியுயோர்க்கிலும் உள்ள தூதரகக் கூடுதல் மையங்களையும் சனிக்கிழமைக்குள் மூடிவிடவேண்டும் என்று அது கெடு விதித்துள்ளது.
தேவையற்ற இடையூறாக அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்குப் பதிலடியாக இதைச் செய்வதாகக் குறிப்பிட்ட அமெரிக்க இராஜாங்க துறை, தற்போதைய இந்த மோதல் போக்கு முடிவுக்கு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.