ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கௌரவத் தவைவர் மற்றும் தூதுவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்தும் ரஷ்யா கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திவரும் நிலையில், சர்வதேச நாடுகள் தமது கண்டனத்தை வலுவாக பதிவு செய்துகொண்டிருக்கின்றன.
ரஷ்யா தொடர்ச்சியாக நான்காவது நாளான இன்றைய தினம் உக்ரைன் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷ்ய படைகள் மீது எதிர் தாக்குதல்களை பதிலடியாக்கிக் கொண்டிருக்கின்றன.
பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கௌரவத் தவைவர் மற்றும் தூதுவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் புதின் சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் கௌவரத் தலைவராக இருந்து வந்தார். 2014 ஆம் ஆண்டு ஜூடோ விளையாட்டின் மிக உயர்ந்த நிலையான எட்டாவது டான் விருதையும் புதின் பெற்றுள்ளார்.
போலந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் 2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோள்பை ப்ளே- ஒஃப் விளையாட்டுகளில் ரஷ்யாவுடன் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மற்றும் ரஷ்யப் போர் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழ்நிலையில், மூன்றாம் உலகப் போராக இது மாறிவிடக் கூடாது என்றும் உலக மக்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]