நாட்டில் தங்கியுள்ள உக்ரேன் மற்றும் ரஷ்ய சுற்றுலா பயணிகளின் விசா காலத்தை நீடிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக இரு நாடுகளுக்குமான சுற்றுலா விசாவை இரண்டு மாதங்களுக்கு கட்டணங்கள் எதுவுமின்றி நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இந்நிலையில், மீண்டும் விசா காலத்தை நீடிக்க சுற்றுலாத்துறை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.