ரஷ்ய அதிபர் புதின் கிழக்கு ஜெர்மனியில் ஒற்றராக பணி புரிந்த அடையாள அட்டை கிடைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 80களில் ரஷ்ய நாடுகள் சோவியத் யூனியன் என்னும் பெயரில் ஒரே நாடாக இருந்து வந்தது. அப்போது ஜெர்மன் நாட்டின் உளவுத் துறையாக ஸ்டசி இயங்கி வந்தது. அதே நேரத்தில் ரஷ்யாவின் பாதிகாப்பு நிறுவனமாக கேஜிபி இருந்து வருகிறது. கடந்த 80 களில் சோவியத் யூனியன் பல ஒற்றர்களை கிழக்கு ஜெர்மனிக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போதைய ரஷ்ய அதிபர் புடினின் அடையாள அட்டை வெளியாகி உள்ளது. இதில் அவர் ஸ்டசி அமைப்பின் சார்பாக ஒற்றர் பணி புரிந்ததற்கான அடையாள அட்டை என குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புடின் கேஜிபி அமைப்பில் பணி புரிந்தது அனைவரும் அறிந்த விஷயமாகும் ஆனால் அவர் ஸ்டசியில் ஒற்றராக பணி புரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஸ்டசி அமைப்பு வெளியிட்ட தகவலில், “புடின் தனது கேஜிபி அமைப்பின் பணிகளை செய்வதற்காக இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர் ஸ்டசி சார்பில் ஒற்று வேலை கிழக்கு ஜெர்மனியில் செய்யவில்லை.” என தெரிவித்துள்ளது.