ரஷியாவிடம் இருந்து ரூ.39,000 கோடிக்கு இந்தியா ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து சீனா 6 எஸ்–400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்கியது. தற்போது இந்தியா 4 எஸ்–400 அமைப்புகளை வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலே கண்டறிந்து வழி மறித்து தாக்கும் வல்லமை கொண்டது இந்த எஸ்–400 ரக ஏவுகணைகள். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை முறையடிக்கும் விதமாக இந்த ஏவுகணை தடுப்பு அமைப்புகள் நிலை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.