உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை மூன்றாவது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், போர் நிறுத்தம் மற்றும் அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
இதேவேளை ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக செயற்படுமாறு இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட்டை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளதாக உக்ரைனின் யூனியன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வியாழன் அதிகாலையில், டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகள் உக்ரைனிய துருப்புக்களின் தொடர்ச்சியான தாக்குதல்களில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள உதவி கோரியதை அடுத்து ரஷ்யா ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியது.
மேற்கத்திய நாடுகள் ரஷ்ய இராணுவ நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு மொஸ்கோ மீதான பொருளாதாரத் தடை அழுத்தத்தை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]