கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் நேற்று மாலை சரமாரியான கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக ரஷ்ய தூதரகத்தினால் காவல்துறையில் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும், உயர்மட்ட உத்தரவின் பேரில், காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்துக்குச் சென்றது.
சம்பவம் நடந்த போது பதிவான கண்காணிப்பு காணொளிப் பதிவுகளை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினர் கோரியிருந்தனர்.
ஆனால், ரஷ்ய அதிகாரிகள் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டனர் என்று கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட நிலத்தை கைப்பற்றும் நோக்கிலேயே ரஷ்ய தூதரக அதிகாரிகள் இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியதாகவும் சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளன