ரயில் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சம்பளப் பிரச்சினையை அடிப்படையாக வைத்து ரயில் சாரதிகள் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதியின் செயலாளருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தீர்வின்றி முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.