கொழும்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (23) பதுளை நோக்கிச் சென்ற விசேட ரயிலில் 15 வயதுடைய சிறுவன் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புகையிரதம் செல்லும் போது செல்பி எடுக்கச் சென்ற குறித்த சிறுவன், ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயிலில் இருந்து தவறி விழுந்ததாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்த சிறுவன் அதே ரயிலில் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு அழைத்துச் சென்று 1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டியில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.