ரம்புக்கனை குடாகம பிரதேசத்தில் சட்டவிரோத சிகரட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் கடையொன்றில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 140 சட்டவிரோத சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இவர் ரம்புக்கன பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக ரம்புக்கனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.