முன்னாள் முதல்வர் ரணில் விக்ரமசிங்கே தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்சனை எழுந்ததாக இலங்கை அதிபர் சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது: ரணில் விக்ரமசிங்கே தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்னை ஏற்பட்டது.
கூட்டாக முடிவு எடுக்கக் கூடாது என்பதில் ரணில் பிடிவாதமாக இருந்தார். இலங்கையில் என்னை கொல்ல நடந்த சதியில் அமைச்சர் ஒருவருக்கும் பங்கு இருந்தது.
கொல்ல சதி நடந்ததால் வேறு வழியின்றி ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க வேண்டியதாயிற்று.
சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி அரசியலமைப்பின் படியே ராஜபட்சே நியமனம் நடைபெற்றது. ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கியதில் அரசியலமைப்பு விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை.
2015ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றது முதலே விக்ரமசிங்கேவின் நடவடிக்கை எதிர்பாராத வகையில் இருந்து வந்தது.
தன்னுடைய கர்வம் காரணமாகவே அவர் நீக்கம் செய்யப்பட்டார். மக்களை பற்றிய சிந்தனையே இல்லாத ஒரு கூட்டத்தை தன்னுடன் வைத்துக் கொண்டு விக்ரமசிங்கே ஆட்சி செய்து வந்தார்.
ஊழல்கள் செய்து நல்ல ஆட்சி என்பதற்காக அர்த்தத்தையே அழித்துவிட்டார். கொள்கை முடிவுகள் எடுப்பதில் எங்களுக்கு இடையே பெரிய இடைவெளி இருந்தது. இவ்வாரு அவர் கூறினார்.