முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தமாக தெரிவித்த கருத்து தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் கடும் எதிர்ப்பு முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியலில் மூத்தவரான ரணில் விக்ரமசிங்கவை தரைகுறைவாக பேசியமை தொடர்பில் ஹிருணிகாவுக்கு கட்சிக்குள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஹிருணிகாவை கண்டிக்காத சஜித்-வருந்தும் மூத்த உறுப்பினர்கள்
ஹிருணிகா, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் முன்னிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பேசி போது, அது தவறு என சஜித் கண்டிக்கவில்லை என்பது குறித்தும் கட்சியில் உள்ள மூத்த பிரதிநிதிகள் வருத்தம் வெளியிட்டுள்ளனர்.
கட்சியின் அடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் எதிர்ப்பை முன்வைக்கப்படவுள்ளதுடன் ஹிருணிகா தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணிக்கு தலைமை தாங்கக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடுவலையில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியின் அதிகார சபைக்கூட்டத்தில் உரையாற்றிய ஹிருணிகா பிரேமச்சந்திர, நாட்டின் பாதுகாப்புக்கு ஏதாவது ஒன்றை மறைத்து வைக்க வேண்டுமாயின் ரணில் விக்ரமசிங்கவின் இரண்டு பந்துகள் மாத்திரமே இருக்கின்றது என தெரிவித்திருந்தார்.