பிரதமர் ரணிலுக்கும் அமைச்சர் சஜித்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு சஜித் ஆதரவுக் கூட்டம் நடாத்துவது ஒரு தடையல்லவென இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணிலுக்கும் அமைச்சர் சஜித்துக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 10 ஆம் திகதி இரவு நடைபெற்றது. சில உடன்பாடுகள் எட்டப்பட்ட நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது.
சஜித் ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என வலியுறுத்தும் ஆதரவுக் கூட்டங்கள் மாத்தளை, மொணராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளன. இதுவரையில், பதுளை, மாத்தறை மற்றும் குருணாகல ஆகிய பிரதேசங்களில் இந்த ஆதரவுக் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.