ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (10) இடம்பெறவுள்ளது.
கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிக்காவிடின் கட்சிக்குள் பாரிய பிரச்சினை ஏற்படும் என பிரதமரிடம் தெரிவித்துள்ளதாக அக்கட்சித் தகவல்கள் கூறியுள்ளன.
இன்றைய சந்திப்பில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இறுதி முடிவு காணப்படவுள்ளதனால் இது முக்கிய நாட்டு அரசியல் விவகாரமாக பார்க்கப்படுகின்றது.