பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் திறைசேரி செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க தலைமையில் உயர் அதிகாரம் கொண்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழுவொன்றை அமைக்கவுள்ளார்.
இந்த குழு, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது குறித்து, பிரதமருக்கு ஆலோசனை வழங்கவுள்ளது.

குழுவின் உறுப்பினர்கள்
இந்தக் குழுவில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தன, சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் திறன் அபிவிருத்தி பணிப்பாளர் கலாநிதி ஷர்மினி குரே, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் சாந்த டேனியல் ஆகியோர் அடங்குகின்றனர்.
இந்தக் குழுவில் தனியார் துறையைச் சேர்ந்த மேலும் மூன்று உறுப்பினர்களும் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராகவும் பொறுப்புக்களை கொண்டுள்ளார்.

இந்திரஜித் குமாரசுவாமி

ஷர்மினி குரே