எதிர்கட்சியை பலவீனப்படுத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவை பயன்படுத்த அரசாங்கம் முயலக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், பெருமளவிற்கு நெருக்கடியில் சிக்குண்டுள்ள அரசாங்கம் அதிலிருந்து விடுபடுவதற்காக ரணில் விக்ரமசிங்கவை அமைச்சரவையில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடக்கூடும்
அல்லது ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வந்த பின்னர் எதிர்கட்சி இரண்டாகும் என அரசாங்கம் கற்பனை செய்யக்கூடும்
எதிர்கட்சியை பலவீனப்படுத்தி தன்னுடைய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு ரணில் விக்ரமசிங்கவை கூட பயன்படுத்தலாம் என்பதே அரசாங்கத்தின் திட்டம்
ரணில் அனுபவம் உள்ள அரசியல்வாதி, அவருக்கு தனிப்பட்ட இராஜதந்திர தொடர்புகள் உள்ளன, எங்களிற்கு ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எதிர்கட்சி பலவீனப்படாது என நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.