ரணில் விக்கிரமசிங்கவையோ சரத் பொன்சேகாவையோ பிரமராக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் கனவிலும் நினைக்க வேண்டாம் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
நாடாளுமன்ற பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டாலும், தன்னோடு பணியாற்றக் கூடிய ஒரு நபரையே தன்னால் பிரதமராக நியமிக்க முடியும் எனவும் அதற்கான அதிகாரம் தனக்கிருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர் எக்காரணங்கொண்டும் ரணிலையோ சரத் பொன்சேகாவையோ பிரதமராக நியமிக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார்.
வெளிநாட்டு ஊடக நிறுவன பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், எக்காரணத்தைக் கொண்டும் தனது முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லையென திடமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.