முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) குடியுரிமையை இரத்து செய்து, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென முன்னிலை சோஷலிச கட்சி (Frontline Socialist Party) தெரிவித்துள்ளது.
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பில் (Colombo) நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ (Duminda Nagamuwa) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை
அல்ஜஷீராவுக்கு (Al Jazeera) கருத்துரைத்த ரணில், பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியதன் ஊடாக, அந்த அறிக்கை அரச கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படாத ஒன்று எனக் குறிப்பிடுவதாக துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும், அவ்வாறானால் அப்போதைய ஜனாதிபதி எதற்காக அதன் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவில்லை எனவும் துமிந்த நாகமுவ கேள்வி எழுப்பியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பயணத்தைப் பாதுகாப்பதற்காகவே அவர் அவ்வாறு செய்தார் எனவும் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.