அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்கும் முக்கிய சந்திப்பொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை மறுதினம் ஈடுபடவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பார்கள்.
செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி இது குறித்து ஆராயவுள்ளனர்.
பின்னர் மாலை 3 மணிக்கு அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசவுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முஸ்தீபில் உள்ள ரணிலிடம், கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக பேச்சை ஆரம்பிக்கவுள்ளது.