அண்மைகாலமாக கமல்ஹாசனின் அறிக்கைகள் தமிழக அரசியலின் ஆழம் பார்த்துள்ளது எனலாம்.
எனவே, இதுபற்றிய கேள்விகளுக்கும், கமலுக்கு பதிலடி கொடுப்பதுமே தமிழக அமைச்சர்களின் வேளையாக போய்விட்டது.
இந்நிலையில் கமலின் சமீபத்திய பேட்டியில்… நீங்களும் ரஜினியும் சேர்ந்து அரசியல் களத்தில் இறங்கினால் சிறப்பான ஆட்சியை கொடுக்க முடியும் என்றார்களே? இணைந்து செயல்படுவீர்களா? எனக் கேட்டனர்.
“நட்சத்திரங்கள் சினிமாவில் இணைவது வேறு. அவருடன் சேர்ந்து நடிப்பது வேறு. ஆனால் அரசியல் களம் வேறு. அதில் இணைய முடியாது.” என்றார்.