நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ஆகியோர் பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து, தனுஷின் சர்ச்சை பெற்றோர்கள் நடிகர் ரஜினிகாந்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ஆகியோர் இருவரும் பிரிவதாக முடிவெடுத்த பிறகு பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களை சமாதானம் செய்து வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. கஸ்தூரி ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் போன்றோர் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தனுஷ் தங்கள் மகன்தான் என்று சில வருடங்களுக்கு முன்பு புகார் கொடுத்த மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த தம்பதியினர் கதிரேசன் மற்றும் மீனாட்சி ஆகியோர் தனுஷ்-ஐஸ்வர்யா இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று ரஜினிக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
தற்போது சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வாழ்ந்து வரும் அவர்கள் தனுஷ் காணாமல்போன தங்கள் மகன் கலையரசன்தான் என்று தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]