அரசியல்வாதிகளை சாடும் போஸ்டர்களை ஒட்டிய ரசிகர்களுக்கு கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
சமீப காலமாக தமிழக அரசை கடுமையாக சாடி வருகிறார் கமல்ஹாசன். அவருடைய சாடலுக்கு தமிழக அமைச்சர்கள் பலரும் எதிர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசை கண்டித்து சென்னை எங்கும், கமல் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்கள். இப்போஸ்டர்கள் சமூகவலைதளத்திலும் பகிரப்பட்டு வருகிறது.
இப்போஸ்டர் கலாச்சாரம் குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தரம் தாழாதீர். வசைபாடி சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப் போகட்டும். நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை. இவருக்கு பதிலளிக்க நானே போதும்.
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.