நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் தேசியவாதி என கூறப்படுவதை தன்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே, கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இதனை கூறியுள்ளார்.
ஏனென்றால், சுமந்திரன் சிங்கள தலைவர்களுடன் ரகசியமாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு தன்னை ஒரு தமிழ் தேசியவாதி என வெளிக்காட்ட சுமந்திரன் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
யுத்த காலங்களில் சிறீதரன்
சுமந்திரனின் இவ்வாறாக இரு பக்க நடவடிக்கைகள் காரணமாக தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்தலில் அவர் தோல்வியடைந்ததாக கருணா கூறியுள்ளார்.
அத்தோடு, தற்போது தமிழரசுக் கட்சியின் தலைவராக இருக்கும் சிறீதரன், யுத்த காலங்களில் எந்தவித பங்களிப்புமின்றி, ஒளிந்திருந்ததாகவும் தற்போது தமிழ் தேசிய பற்றி பேசுவதாகவும் கருணா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.