றகர் வீரர் வஸீம் தாஜுதீன் இனது கொலை விவகாரம் தொடர்பில் இன்று(16) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரான யோஷித்த ராஜபக்ஷவை விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
‘சிரிலிய சவிய’ அமைப்பின் கீழ் பாவனையிலிருந்த செஞ்சிலுவை சங்கத்தினால் வழங்கப்பட்ட டிபண்டர் வாகனம் தொடர்பில் பிரத்தியேக விசாரணை ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் நேரடி மேற்பார்வையில் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் நாகஹமுல்ல, பிரதிப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகர ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் முனசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால் குறித்த இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.