முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவிடம் இருந்து ஐந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யா கோத்தா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், யோஷித ராஜபக்சவிடம் இருந்த ஏழு துப்பாக்கிகளில் ஐந்து துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கைப்பற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட பாதுகாப்பு
அத்தோடு, தனிநபர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் துப்பாக்கிகளில் இருந்து 182 துப்பாக்கிகள் மட்டுமே மீள பெறப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யோஷித ராஜபக்சவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாகவும், வேறு எந்த துப்பாக்கியும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.