யூரோ கிண்ணம்: நடையைக் கட்டியது சுவிட்சர்லாந்து.. காலிறுதிக்கு முன்னேறிய போலந்து.
இதில் லீக் போட்டிகள் முடிந்த நிலையில் “நாக் -அவுட்” சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் சுவிட்சர்லாந்து- போலந்து அணிகள் மோதின.
இந்தப் போட்டி தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாட தொடங்கினர்.
ஆட்டத்தில் 39வது நிமிடத்தில் பாஸ்க்சிகோவ்ஸ்கி போலந்து அணிக்கு முதல் கோலை அடித்தார். ஆனால் சுவிட்சர்லாந்து வீரர்கள் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதியில் போலந்து 1-0 என முன்னிலையில் இருந்தது.
இதன் பின்னர் தொடங்கிய 2வது பாதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர்களின் கோல் முயற்சியை போலந்து தடுப்பாட்டக்கார்ரகள் லாவகமாக தடுத்தனர்.
இறுதியில் 82வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கு ஷகிரி பதில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.
பின்னர் ஆட்டம் முடியும் வரை இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் கூடுதல் நேரம் கடைபிடிக்கப்பட்டது. அப்போதும் இரு அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 5-4 என போலந்து வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது
.