யூரோ கிண்ணம்: அரை இறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் ஐஸ்லாந்தை வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இன்றைய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியும், பிரான்ஸ் அணியும் மோதின. பலம் வாய்ந்த இரு அணியினரும் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள கடுமையாக போராடினர்.
ஆட்டத்தின் 12-வது நிமிடத்திலேயே பிரான்ஸ் அணியின் Giroud முதல் கோலை அடித்து கணக்கை துவங்கி வைத்தார். இதனையடுத்து 20-வது நிமிடத்தில் போக்பா அடுத்த கோலை அடித்து அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றார்.
தொடர்ந்து 43-வது நிமிடத்தில் பேயட் ஒரு கோல் அடிக்க, 45-வது நிமிடத்தில் கிரீஸ்மான் அடுத்த கோலை அடித்து பிரான்ஸ் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தார்.
தொடர்ந்து நான்கு கோல்கள் அடித்து வலிமையான நிலையில் இருந்த பிரான்ஸ் அணிக்கு பலம்கொண்ட மட்டும் நெருக்கடி தர முயன்றது ஐஸ்லாந்து அணி.
ஆனால் ஐஸ்லாந்து அணியின் அனைத்து வியூகங்களும் தவிடுபொடியானது. இதனிடையே 56-வது நிமிடத்தில் ஐஸ்லாந்து அணியின் Sigthorsson தங்களது அணியின் முதல் கோலை அடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
ஆனால் 59-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி மீண்டும் ஒரு கோல் அடித்து ஐஸ்லாந்து அணியை அச்சுறுத்தியது.
ஆட்டத்தின் முடிவில் 5-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.