ஐசிசி யு-19 (19 வயதுக்கு உட்பட்டோர்) கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய யு-19 அணி, தனது முதல் லீக் போட்டியில், வலுவான ஆஸ்திரேலிய யு-19 அணியை, 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமர்க்களப்படுத்தியது.
இந்திய யு-19 அணி, தனது 2வது லீக் போட்டியில், கத்துக்குட்டியான பாப்புவா நியூ கினியாவுடன், இன்று பலப்பரீட்சை நடத்தி வருகிறது. மவுண்ட் மான்கானுயில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய யு-19 கேப்டன் பிரித்வி ஷா, பீல்டிங் என்ற மிகச்சிறப்பான முடிவை தேர்வு செய்தார்.
இதன்பின் முதலில் களமிறங்கிய பாப்புவா நியூ கினியா பேட்ஸ்மேன்கள், அனல் பறந்த இந்திய பந்து வீச்சின் உக்கிரத்தை சமாளிக்க முடியாமல், நூல் பிடித்தாற்போல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு அணிவகுப்பு நடத்தினர்.
21. 5 ஓவர்களில் வெறும் 64 ரன்களுக்கு பாப்புவா நியூ கினியா ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக ஓவிய ஷாம் 15 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மொத்தம் 4 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டாயினர். இந்திய யு-19 தரப்பில், அன்குல் ராய் 5, ஷிவம் மாவி 2, நாகர்கோட்டி, அர்ஷிப்தீப் சிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் எளிய இலக்கை நோக்கி, இந்தியாவின் தொடக்க வீரர்களாக கேப்டன் பிரித்வி ஷா-மன்ஜோத் கல்ரா களமிறங்கினர். 2 ஓவர்கள் முடிவில் இந்திய யு-19 அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்திருந்தது.
பிரித்வி ஷா 7, மன்ஜோத் கல்ரா 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.