யாழ். போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை (21) யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, 22ஆம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய அமைதிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உட்பட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.








